ஜேர்மனியில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஐவர்
ஜேர்மனியில் வீடொன்றில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி பொலிஸார் அந்த வீட்டுக்கு சோதனைக்கு சென்றனர். அந்த சமயத்தில வீட்டில் மூன்று குழந்தைகள் உள்ளப்பட மொத்தம் 5 பேர் கொடூரமாக செய்யப்பட்டுள்ள சம்பவம் கிடைக்கப்பட்டுள்ளது.
சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடபட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் தகவல்களின்படி, கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெரியவர்களும் 40 வயதுடையவர்கள் என்றும், குழந்தைகள் நான்கு, எட்டு மற்றும் பத்து வயதுடையவர்கள் என்றும் தெரியவந்தது.