சீனாவில் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
தைவானில் உருவான கெய்மி புயலால் சீனாவில் பெய்த கடும் மழையால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சீனாவின் புஜியான் மாகாணத்தில் 118 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது அங்கு மழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக சீனாவின் 12 நகரங்களில் மழை 40 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பதிவானது. இதன் காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனால் சுமார் 6 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.
மேலும் இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.