பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டிய 10 வயது சிறுவன் கைது
தான் கல்வி கற்கும் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதாக மிரட்டல் விடுத்த பத்து வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாரியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப் போவதாக சிறுவன் மிரட்டல் விடுத்துள்ளான்.
பேட்ரியோட் ஆரம்ப பள்ளியில் தரம் ஐந்தில் கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளான்.
அலைபேசியில் குறுஞ்செய்தி ஊடாக குறித்த சிறுவன் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தான் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான மிரட்டல்களை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் விரைந்து செயற்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் டெக்ஸாஸ் ஆரம்ப பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.