கோட்டைக்கு வெளியே குவியும் மலர் வளையங்கள்!
இரண்டாம் எலிசபெத்(Elizabeth) மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து பால்மோரல் கோட்டைக்கு வெளியே பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்(Elizabeth) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 96. கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகின.
உடல்நிலை மோசமான நிலையில் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார்.
இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#WATCH | UK: Floral bouquets placed outside the premises of Balmoral castle as people mourn the demise of Britain's longest-serving monarch Queen Elizabeth II who passed away at the age of 96 yesterday
— ANI (@ANI) September 9, 2022
(Source: Reuters) pic.twitter.com/2Fndfa9cdy
இரண்டாம் எலிசபெத்(Elizabeth) மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து, எலிசபெத்(Elizabeth) மகாராணி தனது இறுதிமூச்சை விட்ட ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.