புடினுக்கு அஞ்சி பிரித்தானியாவுக்கு வந்த பறக்கும் பென்டகன்!
அணுக்கதிர் வீச்சைத் தாக்குப்பிடிக்கக்கூடிய பறக்கும் பென்டகன் என்று அழைக்கப்படும் விசேஷ விமானம் பிரித்தானியா வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரஸ்ஸல்ஸ் வந்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுதத்தை பிரயோகிக்கலாம் என்ற அச்சம் காரணமாக அணுக்கதிர் வீச்சைத் தாக்குப்பிடிக்கக்கூடிய பறக்கும் பென்டகன் என அழைக்கப்படும் விசேஷ விமானம் பிரித்தானியா வந்தடைந்துள்ளது.
புடின் அணு ஆயுத தாக்குதல் துவங்கினால், அமெரிக்க ஜனாதிபதி குறித்த விமானத்தில் பறந்தவண்ணம், அமெரிக்க அணு நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்கள் ஏவும் இராணுவ தளங்கள் ஆகிய இடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வசதிகள் அந்த விமானத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் இதுபோன்று அமெரிக்காவிடம் நான்கு விமானங்கள் உள்ள நிலையில், அணு ஆயுதப் போர் உருவாகும்பட்சத்தில், உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதற்காக, அவற்றில் ஒரு விமானம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.