அமெரிக்காவைத் தொடர்ந்து மெக்சிகோவும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி
அமெரிக்காவைத் தொடர்ந்து, மெக்சிகோவும் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளது.
சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதிக்க மெக்சிகோ நாட்டாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடுமையாக விமர்சித்துள்ள சீனா
இந்நிலையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக, மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்தார்.
இதேவேளை மெக்சிகோவின் வரி விதிக்கும் முடிவை சீனா கடுமையாக விமர்சித்து உள்ளது. சீனா உட்பட வர்த்தக கூட்டாளிகளின் நலன்களுக்கு கணிசமாக தீங்கு விளைவிக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை மெக்சிகோவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்தியா-மெக்சிகோ ஆகிய இருநாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.