கனடா தபால் சேவையை பயன்படுத்தி சர்வதேச போதைப்பொருள் கடத்தல்
கனடா தபால் சேவையை பயன்படுத்தி சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் செய்ததாக ஒட்டாவாவைச் சேர்ந்த நால்வருக்கு குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.
கனடாவின் பொலிஸார் சுமார் 10 மாதங்கள் நீண்ட விசாரணைக்குப் பின்னர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பல நாடுகளுக்கு போதைப்பொருள் அனுப்பிய கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மெத்தாம்பெட்டமின்கள், கொகெயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை கனடா முழுவதும் மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு விநியோகம் செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

• அமெரிக்கா
• அவுஸ்திரேலியா
• நியூசிலாந்து
• ஜெர்மனி
• ஸ்வீடன்
• பிரான்ஸ்
• ஸ்பெயின்
• சுவிட்சர்லாந்து
• நெதர்லாந்து
• ஐக்கிய இராச்சியம்
• ஸ்லோவாக்கியா
• ஆஸ்திரியா
• இந்தியா
• அயர்லாந்து உள்ளிட்ட ஒரு பல நாடுகளுக்கு தபால் மூலம் போதைப் பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் சோதனையின் மூலம் 1.2 கிலோ மெத்தாம்பெட்டமைன், 200 ஹைட்ரோமோர்போன் மாத்திரைகள், கொகெயின் மற்றும் பிற போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 166000 டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.