கனடாவில், விலை அதிகரிப்பு தொடர்பில் நிறுவனங்களிடம் விசாரணை
கனடாவின் முன்னணி உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்களிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகரித்துச் செல்லும் நிலையில் நிறுவனங்களிடம் அவற்றின் லாப அளவு தொடர்பில் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
கனடாவின் முதனிலை மளிகைப்பொருள் விற்பனை நிறுவனங்களான லொப்லோவ், மெட்ரோ மற்றும் எம்பயர் ஆகிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளிடம் விசாரணை நடாத்தப்பட உள்ளது.
பிரதான மளிகைப்பொருள் நிறுவனங்கள் எவ்வளவு தொகை லாபத்தை ஈட்டுகின்றன என்பது குறித்து வெளிப்படையான தகவல்களை வெளியிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணவுப் பொருள் விலையேற்றம் தொடர்பில் விசாரணை நடாத்த உள்ளனர்.