வட்டி வீதங்களை உயர்த்த வேண்டாம்: ஒன்றாரியோ முதல்வர் கோரிக்கை!
நாட்டில் வங்கி வட்டி வீதங்களை உயர்த்த வேண்டாம் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் போர்ட், மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வட்டி வீத அதிகரிப்பினால் மகாண மக்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய சில மாதங்களாக கனடிய மத்திய வங்கி வட்டி வீதங்களை தொடர்ச்சியாக உயர்த்தி செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டி வீத அதிகரிப்பு மக்கள் அனைவரையும் அழுத்தங்களக்கு உள்ளாக்கியுள்ளது என முதல்வர் போர்ட் தெரிவிததுள்ளார்.
இதேவேளை, வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டாம் என ஏற்கனவே பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வ டேவிட் எபியும் கோரியிருந்தார்.