களனி பல்கலைகழக மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்; இராஜாங்க அமைச்சரின் மகன் கைது!
ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களனிப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் 2 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் , தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்களில் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.