மேலும் ஒரு வெளிநாட்டு அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி!
அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாதாரண மக்கள் தொடங்கி அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தனது டுவிட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், காய்ச்சல் மற்றும் லேசான தலைவலி ஏற்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அர்ஜென்டினாவில் இதுவரை 23 லட்சத்து 73 ஆயிரத்து 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.