ரஷ்யாவில் வெளிநாட்டு மாணவர்கள் கட்டாய இராணுவ சேர்ப்பு? இந்திய இளைஞன் கைது
ரஷியாவுக்கு படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிக சம்பளம் போன்ற ஆசைகளால் படிக்க செல்லும் மாணவர்கள் பலர் ராணுவத்தில் சேரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்திய இளைஞன் உக்ரைன் படைகளால் கைது
இந்நிலையில், இந்தியா குஜராத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்ற மாணவர் ரஷியாவுக்கு உயர் கல்வி படிக்க சென்றுள்ளார்.
ஆனால், அவர் ரஷிய ராணுவத்தில் சேர்ந்த நிலையில் போரில் உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது உக்ரைனில் கைதியாக உள்ள முகமது ஹுசைன் தன்னை மீட்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகமது உக்ரைன் ராணுவத்தின் பிடியில் உள்ள நிலையில் அவர் பேசும் வீடியோவை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் ரஷ்யா செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் நிலையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதேவேளை உக்ரைன் , ரஷியா இடையே ஆரம்பீத்த போர் இன்று ஆயிரத்து 397வது நாளாக நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது