ஷேக் ஹசீனா தப்பியோட்டம்; சிறையில் இருந்த முன்னாள் பிரதமர் விடுதலை
சிறையில் இருந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷப்தீன் சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
சில மணி நேரம் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையம்
அதேவேளைப் பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக, டாக்கா சர்வதேச விமான நிலையமும் சில மணி நேரம் மூடப்பட்டது.
பங்களாதேஷின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஷ்ரப் பின் மோர்டாசாவின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம் மற்றும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பலத்த சேதம் விளைவித்துள்ளனர்.
அதேவேளை மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு தப்பி ஓடியதால், மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என அவரது மகன் அறிவித்துள்ளார்.