பிரான்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி
பிரான்சின் அமைந்துள்ள ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அங்கு உருவாகி உள்ள புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதினை தொடர்ந்து ரியூனியன் தீவில் பெய்து வந்த கன மழையால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் பல வீடுகளும் சேதமடைந்தன.
மேலும் சாலையில் சென்ற பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. இதற்கிடையே பிரான்சில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.