பங்களாதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து 4 சடங்கள் மீட்பு ; துர்நாற்றத்தால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்
பங்களாதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலையாளிகள். கொலை செய்துவிட்டு அங்கயே இருந்து உணவு சாப்பிட்டு, குளித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
பங்களாதேசத்தின் ரங்பூர் நகரில் மச்சுவாபார பகுதியில் கணபதி சக்கரவர்த்தி (வயது 65) அவரது மனைவி பிரிதிலா சக்ரவர்த்தி (50) , இவர்களின் மகள் ஆகமி (23) மற்றும் மகன் பிரியம்(12) ஆகியோர் வசித்து வந்தனர்.

கணபதி சக்ரவர்த்தி ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். குடும்பத்தினர் சென்ற வாரம் (20-ம் திகதி) இரவு வீட்டில் இருந்துள்ளனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து வீடு பூட்டி இருந்ததுள்ளது.
இதற்கிடையே சனிக்கிழமை இரவுக்குள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், வீட்டுக்குள் சென்று பார்த்த போது 4 பேரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர்.
உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.