மீண்டும் வீடுகளுக்கான சொத்து வரியை அதிகரித்த பிரான்ஸ்
பிரான்ஸ் அரசாங்கம், 2026 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரியை மீண்டும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
நிதி அமைச்சு, நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதால், இந்த உயர்வு நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொருவரும் சராசரியாக 63 யூரோ கூடுதலாக சொத்து வரி செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில், வீடுகளின் வசதிகள், இடம் மற்றும் சுற்றுப்புற சூழல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும்.
இதனால், பல நகரங்களில் சொத்து வரி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு, பிரான்ஸில் வீடு வாங்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.