அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அளித்த பரிசு: என்ன தெரியுமா அது?
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலகப்புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லிபர்டி தீவில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.
அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டு ஆன போது அதாவது 1886 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு பிரான்ஸ் மற்றொரு சுதந்திர தேவி சிலையை பரிசாக அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு பரிசாக மினி சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் அனுப்பி வைத்துள்ளது இந்த சிலை 3 மீட்டர் உயரம் கொண்டது.
இந்த புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூன் 4ஆம் தேதி, நியூயார்க் சென்றடையும். அங்கு நடைபெறும் கூட்டத்தில் இந்த சிலை காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.