இது ஒரு சிறந்த வெற்றி" –கிறிஸ்டியா ஃப்ரீலண்ட்
முழுமையான பெரும்பான்மையை பெற முடியாதபோதிலும், லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி நடத்திய பிரசாரம் “அற்புதமானது” எனவும், அதன் விளைவாக கிடைத்த முடிவு “சிறந்த வெற்றியாகும்” எனவும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார்.
தனது யூனிவர்சிட்டி-ரோஸ்டேல் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களிடம் ஃப்ரீலண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இன்றிரவு நாங்கள் அரசு அமைக்கப்போகிறோம் என்பது உறுதி. எனது பார்வையில் இது ஒரு சிறந்த வெற்றி,” என குறிப்பிட்டுள்ளார்.
மார்க் கார்னி ஒரு சிறப்பான பிரதமர். கடந்த சில வாரங்களில் பிரதமராக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரின் பிரசாரமும் அற்புதமானது,” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலண்ட், அந்த பதவியை ராஜினாமா செய்த தைரியம் குறித்தும் பேசினார். “நான் ராஜினாமா செய்த காலை, அது என் தொழில்முறை வாழ்க்கையில் எட்டிய கடினமான முடிவு. ஆனால் அது சரியான முடிவு என்பதை நாள்தோறும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.