கியூபெக் தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னேற்றம்
கனடா நடத்திய 45-வது பொதுத் தேர்தலில், சுயாட்சியைக் கோரும் புளொக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சி, பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த முறைப் பெற்றிருந்த 35 இடங்களில் இருந்த புளொக் கியூபெக்வா தற்போது சுமார் 23 இடங்களுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எனினும், கட்சி தலைவர் ஈவ்-ஃப்ரான்சுவா பிளாஞ்செட் (Yves-François Blanchet), பெலியில் சாம்பிலி Beloeil–Chambly தொகுதியில் வெற்றி பெற்று தனது இடத்தை பாதுகாத்துள்ளார்.
தேர்தல் முழுவதும், பிரதமர் பதவிக்காக தாம் முயற்சிக்கவில்லை எனவும் ஆனால் கியூபெக் மக்களின் நலனுக்காக போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவுடன் நடப்பதற்கான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் “இணைமை மற்றும் திறமையுடன் செயல்படுவோம்” என உறுதியளித்தார்.
சில முக்கியமான இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், புளொக் கட்சிக்கு இது ஒரு அவசர எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்த தேர்தலில் கியூபெக் மாகாணத்தில் லிபரல் கட்சி பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த தேர்தலுடன் ஒப்பீடு செய்யும் போது லிபரல் கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.