பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு குவியும் நிதி!
பிரித்தானியாவில் ஸ்மெத்விக் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்த 18 வயது இளைஞன் ஜீஷான் அப்சலின் (Zeeshan Afzal) நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பு, இதுவரை 9,000 பவுண்டுகளைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் பகுதியில் உள்ள ஓல்ட்பரி வீதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஜீஷான் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

எனினும், இளைஞன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், இளைஞன் மீதான தாக்குதலானது இன ரீதியான அல்லது மத ரீதியான வன்மம் காரணமாக நடந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பிரிட்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் இணையம் வாயிலாக, நன்மைகள் தரும் தர்மம் எனும் நோக்கில் இந்த நிதியை சேகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.