ஒன்றாரியோவில் எரிவாயு விலையில் வீழ்ச்சி
ஒன்றாரியோவில் எரிவாயு விலையில் வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாளைய தினம் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான நகரங்களில் எரிவாயுவின் விலை 12 சதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
றொரன்டோ பெரும்பாகம், றொரன்டோ, ஹமில்டன், லண்டன், பேரே, கிட்சனர் ஆகிய ஒன்றாரியோவின் பல பகுதிகளில் எரிவாயு விலை வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 179.9 சதத்திற்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மைய மாதங்களில் ஒன்றாரியோவில் எரிபொருட்களின் விலைகளில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், தேர்தல் வாக்குறுதிக்கு அமைய மாகாண அரசாங்கம் எரிபொருளுக்கான வரிகளை அண்மையில் குறைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து எரிவாயுவின் விலை சற்று குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.