ஐரோப்பா நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய எரிவாயு விலை!
அதிபர் புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்த பிறகு முதல்முறையாக, ஜெர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் எரிவாயுவின் மொத்த விலை போருக்கு முந்தைய விலையை விட குறைந்துவிட்டதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் மீதமுள்ள குளிர்கால மாதங்களில் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என ஐரோப்பிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட ஐரோப்பா மற்றும் ஜெர்மனியில் மொத்த எரிவாயு விலை இப்போது குறைந்துள்ளது.
ஜனவரி 2ஆம் திகதி அன்று, நெதர்லாந்தின் எரிவாயு வர்த்தக தளம் எரிவாயு விலை மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கமைய, ஐரோப்பாவில் ஒரு மெகாவாட் மணிநேரத்திற்கு 72,75 யூரோக்கள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குளிர்காலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஜெர்மனியில் எரிவாயு இருப்புக்கள், இலையுதிர் மற்றும் குளிர்கால வானிலை காரணமாக எரிவாயு தேவை குறைமை ஆகியவையே இப்போது விலை குறைவிற்கு காரணம் என ஜேர்மனியில் உள்ள வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நவம்பரில், ஜெர்மனி தனது குளிர்கால எரிவாயு இருப்புக்களை 100 சதவீதத்திற்கு நிரப்பியது, எனினும் விலை அதிகரிப்பு காரணமாக வீடுகளும் வணிகங்களும் நுகர்வு குறைக்க வேண்டியிருந்தது.
இப்போது குளிர்காலத்தின் பாதியில், ஜெர்மனியின் எரிவாயு இருப்பு 90 சதவீதம் நிரம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.