கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ளும் வெளிநாடொன்றின் ஜனாதிபதி!
ஜெர்மனிய அதிபர் ஒலாஃப் சோல்த்சு (Olaf Scholz) கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இந்த மாத இறுதியில் அவர் இவ்வாறு கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல், ரொறன்ரோ, ஸ்டிபென்வெலி மற்றும் நியூபவுன்ட்லாண்ட் ஆகிய பகுதிகளுக்கு அவர் விஜயம் செய்ய உள்ளார்.
ஜெர்மனிய ஜனாதிபதி கனேடிய மற்றும் ஜெர்மனிய வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய எண்ணெய் குழாய்க்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
ஜெர்மனிக்கு செல்லும் ரஷ்ய எண்ணெய் குழாய்க்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஜெர்மனிக்கான இயற்கை எரிவாயு இந்த குழாய் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான ஓர் பின்னணியில் ஜெர்மனிய அதிபர் கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளனர்.