அகதிகள் விடயத்தில் கடுமையாக சட்டங்களை அறிமுகப்படுத்தும் ஜெர்மனி!
ஜெர்மன் நாட்டில் அகதிகள் விடயத்தில் கடுமையாக சட்டங்களை அந்நாட்டு அரசாங்கமானது அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பல்வேறு விதமாக அரச மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றன.
கடந்த 4ஆம் திகதி அகதிகள் ஜெர்மனியில் வேலை செய்வது தொடர்பான சில நெகிழ்வு தன்மையான விடயங்களை அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.
இதன்படி, வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது ஏற்கனவே 1.8.2018 ஆம் ஆண்டுக்கு முதல் வந்தவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்பொழுது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது 2022 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தில் வந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.