கோல்ப் மைதானத்தில் படமெடுத்தாடிய ராட்சத நாகப்பாம்பு!
சமூக வலைதளங்களில் நாளாந்தம் புதுப்புது காணொளிகள் பதிவிடப்பட்டாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பயனர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன.
குறிப்பாக பாம்புகள் பற்றிய காணொளிகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்த நிலையில் தென்னாப்ரிக்காவில் கோல்ப் மைதானத்தில் ஒரு ராட்சத நாகப்பாம்பு படமெடுத்து ஆடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபரும், கோல்ப் வீரருமான எலிதா பீட்சே தனது இன்ஸ்டாகிராமில் அந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
அதில், புதரில் இருந்து வெளிவரும் ராட்சத நாகப்பாம்பு மைதானத்தில் படமெடுத்து ஆடுவதையும், அங்கிருந்த பெண் வீரர்கள் டீ பாக்சை குறிவைப்பதையும் காட்டுகிறது.
இந்த காணொளி பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.