இங்கிலாந்தில் பெண் கொலையின் கைதான 13 வயது சிறுமிக்கு பிணை
இங்கிலாந்தில் பெண் ஒருவர் கொலையில் சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் (Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் என்ற மனநலத் தொண்டு நிறுவன ஊழியரின் மரணம் குறித்து சகா ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்விண்டனில் கொலைசெய்யப்பட்டார். 55 வயதான (Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் மிகவும் கனிவானவர் என்றும் கவனமுள்ளவர் என்றும் சக ஊழியர்களால் விவரிக்கப்பட்டார்.
இதேவேளை, அவர் தொழில் புரிந்த ( Kelly Foundation) தி கெல்லி ஃபவுண்டேஷன் என்ற அவரது தொண்டு நிறுவனம், அவரது இழப்பால் தாம் இதயம் உடைந்து உள்ளதாகவும் தனது இரண்டு குழந்தைகளுக்காகவும் தொண்டுக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் இருந்தார் என்றும் கூறியுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சாராவின் இழப்பு ஃபவுண்டேஷனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாகும் என்றும், அவர் அந்த தொண்டு நிறுவனத்தின் பணியில் மிக முக்கியமானவர் என்றும் அந்நிறுவனத்தில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.