பிரான்ஸிலுள்ள ஏழை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
பிரான்ஸ்ல் எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள மிக குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்தமாக 10 மில்லியன் குடும்பங்கள் நன்மையடைய உள்ளனர் என பிரதமர் எலிசபெத் போர்ன்(Èlisabeth Borne) அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் எலிசபெத் போர்ன்(Èlisabeth Borne) தெரிவிக்கையில்,
பிரெஞ்சு மக்களின் வாங்கும் திறனை தொடர்ந்தும் பாதுகாக்க நாம் முன்னிற்கிறோம். அதனால் மிகவும் நலிவடைந்தோருக்காக மாதம் 100 யூரோக்களை எரிபொருள் கொடுப்பனவாக வழங்க தீர்மானித்துள்ளோம்.
வரும் புதிய ஆண்டில் இருந்து இந்த கொடுப்பனவு வங்கிகளூடாக செலுத்தப்படும் என தெரிவித்தார். தற்போது எரிபொருளின் விலைக்கழிவில் 10 சதம் அரசு வழங்கி வருகிறது.
டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலைக்கழிவு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்தே அரசு மேற்படி கொடுப்பனை அறிவித்துள்ளது.