பிரான்ஸ் மோண்ட்பெல்லிர் பகுதி மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
பிரான்ஸ் Montpellier பகுதி குடியிருப்பாளர்கள் விரைவில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர வலையமைப்பின் பேருந்துகள் மற்றும் டிராம்கள் இலவசமாக மக்கள் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த நடைமுறை 500,000 மக்களை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என Montpellier மேயர் தெரிவித்துள்ளார். இதன்படி சமீபத்திய எரிசக்தி நெருக்கடி, சுற்றுச்சூழல் மாற்றத்தின் மூலம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக எடுத்துக்காட்டுகிறது.
மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதனை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகவும் இது காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நடவடிக்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் தங்கள் பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, 18 வயது உயர்நிலைப் பாடசாலை மாணவர் ஒருவர் ஆண்டுக்கு 196 யூரோக்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.