உக்ரைனில் இருந்து தப்பிவந்த பெண்மீது காதல்; பாக்ஷை தெரியாததால் தவிப்பு; சேர்த்துவைத்த கூகிள் மொழிபெயர்ப்பு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து உயிர் தப்ப ஓடி வந்த பெண் ஒருவரை பிரித்தானியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதில் வேடிக்கை என்னவெனில் ஒருவருக்கு மற்றவரின் மொழிதெரியாது தவித்த நிலையில் கூகிள் மொழிபெயர்ப்புதான் இருவரையும் சேர்த்துவைத்துள்ளது.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உக்ரைனில் கணக்காளராக பணியாற்றி வந்த 37 வயதான விரா கிளிமோவா என்பவர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக அங்கிருந்து தப்பித்து நண்பர்கள் சிலர் உதவியுடன் பிரித்தானியாவின் பிரிஸ்டல் என்ற இடத்தை வந்தடைந்துள்ளார்.
அங்கு உக்ரைனிலிருந்து தப்பி வருபவர்களுக்கு உதவும் நோக்கில் முகப்புத்தக குழு ஒன்றை நடத்தி வரும் 28 வயதான லூக் டிக்கின்சன் என்பரை விரா கிளிமோவா, தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கு உதவுவது என முடிவு செய்திருந்த லூக் டிக்கின்சன் தற்செயலாக ஏசையவின் புகைப்படம் கண்ணில் பட, உடனே அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார்.
இதனையடுத்து இருவரும் பழகிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள எண்ணத்தை லூக் டிக்கின்சன் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு இருந்த முக்கிய பிரச்சினை என்ன என்றால் லூக் டிக்கின்சனுக்கு உக்ரைன் மொழி தெரியாது, அதேபோல ஏசையவுக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது.
இதன்போதுதான் இருவருக்கும் கூகிள் மொழிபெயர்பு கைகொடுத்தது. தாங்கள் சொல்ல நினைத்ததை மொழிபெயர்த்தே பேசிக்கொண்டாலும், இருவருக்கும் பொதுவாக இருந்த நகைச்சுவை உணர்வு இருவரையும் இன்னும் நெருக்கமாக்கியிருக்கிறது.
இந்நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடித்து திருமணம் செய்துகொண்டார்களாம்.