ஜீவன் தொண்டைமானை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கும் அரசாங்கம்
இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடு காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதேவேளை, புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜீவன் தொண்டமானுக்கு அரசாங்கம் தூதுவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தின் அழைப்பை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.