வெள்ளை மாளிகையில் அமோக விருந்து ; ரொனால்டோவிற்கு ட்ரம்ப் கூறிய தகவல்
அமெரிக்கா சென்றுள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார்.
அப்போது, சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு விருந்து அளிக்கப்பட்டதுடன், இந்த விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நன்றி தெரிவித்த ட்ரம்ப்
இதில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியல் ஆப்பிள் சிஇஓ டிம் குக், டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் கலந்து கொண்டதற்காக ரொனால்டோவிற்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய மகன் பரோன் தங்களுடைய மிகப்பெரிய ரசிகர் எனத் தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா லீக்கில் உள்ள அல்-நாசர் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் ஆனார். அதில் இருந்து சவுதி கால்பந்து லீக்கின் முகமாக அறியப்படுகிறார்.
40 வயதான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனல்டோ, அல்-நாசர் கிளப் உடனான ஒப்பந்தத்தை மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார்.