பிரான்ஸ் கலவரம்; சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் பாட்டி உருக்கமான கோரிக்கை
பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி தனது பேரனின் உயிரிழப்பை தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கலகங்களை விளைவிப்போரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலைகளை சேதப்படுத்தவேண்டாம்,பேருந்துகளை சேதப்படுத்தவேண்டாம் தாய்மார்களே பேருந்தினை பயன்படுத்துகின்றனர் என பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் மேர்சூக்கின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள்
, பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜன்னல்களை பேருந்துகளை பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள் எங்களிற்கு அமைதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது பேரனை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து மீது தான் கடும்கோபத்தில் உள்ளதாகவும் எனினும் பொலிஸார் மீது பொதுவாக எந்த கோபமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பிரான்சின் நீதிஅமைப்பின் மீது தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கடந்த செய்வாயன்று (27) ஆம் திகதி ஆபிரிக்க இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிராக வெடித்த வன்முறையால் மூண்ட கலவரங்களால் பிரான்ஸ் பறி எரிகின்றமை குறிப்பிடத்தக்கது,