அவுஸ்திரேலியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த பெரும் துயரம்
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பின்னணியுடைய ஹேமலதா சச்சிதானந்தம் (67), மற்றும் அவரது மகன் பிரமுத் (34) ஆகியோரே இவ்வாறு வெள்ல நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அது காணாமல் போன தாய் மற்றும் மகனுடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதேவேளை , தாய் ,மற்றும் மகன் பயணித்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட காரில் ஆவணங்கள் காணப்பட்ட போதும், இருவரும் இருக்கவில்லை. இந்த நிலையில், ஆண், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ள அது காணமல்போன யாழை சேர்ந்த தாய், மகனுடையதா என்பதை உறுதி செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.