ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகைக்கு நேர்ந்த பெரும் சோகம்
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் உயிரிழந்து உள்ளார்.
உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந் திகதி அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்தது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) கூறினார். இதன்படி போரானது தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.
இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (Oksana Sweats) உயிரிழந்துள்ளார் என சர்வதேச பத்திரிகை உறுதி செய்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.