டொராண்டோவில் அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
கனடா டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் இலக்கு வைத்து நேற்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 அளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து விரைந்த காவல்துறையினர், தூதரக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அடுத்து விசாரணைகளுக்காகத் தூதரகத்தைச் சுற்றியுள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் டொராண்டோ தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து, டொராண்டோவில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஈரான் அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களின் இடங்கள் மீது தொடர்ச்சியாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.