தென் ஆபிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி
தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜொஹனர்ஸ்பர்க் நகரத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 12 பேர் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தாலும், பின்னர் பலி எண்ணிக்கை 9 ஆக திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜொஹானஸ்பர்க் நகரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தென்மேற்கே உள்ள பெக்கர்ஸ்டால் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இருந்தவர்கள் இந்த தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
வீதியில் இருந்தவர்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையத்தில் இருந்தவர்களை சராமரியாக சிலர் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கினற்னர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணகைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.