வீடொன்றில் கேட்ட துப்பாக்கிச்சூடு சத்தம்: சோதனையிட்ட சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுள்ளது.
இது தொடர்பில் தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் பொலிஸார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது, வீட்டுக்குள் இருந்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வேளை திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது, சோதனை நடத்த சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதோடு வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.