கனடாவில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஆமை
கனடாவின் ஹாலிபிக்ஸில் ஆமையொன்று தனது நூறாம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளது.
நோவா ஸ்கோட்டியாவின் ஹாலிபிக்ஸின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இந்த ஆமை வாழ்ந்து வருகின்றது.
இந்த ஆமையானது கடந்த 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாழ்ந்து வருகின்றது.
இந்த ஆமை 5 டொலர்களுக்கு புளொரிடாவிலிருந்து கனடாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1980களிலிருந்து இந்த ஆமைக்கான பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வார இறுதி நாட்களில் இந்த ஆமைக்கான பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றது.
கோஸ் என்றழைக்கப்படும் இந்த ஆமை நூறு வயதிலும் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோபர் ரக நில ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஆமை இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
காடுகளில் வாழும் ஆமைகள் 40 முதல் 80 வயது வரையில் ஆயுட் காலத்தைக் கொண்டவையாகும்.