H-1B விசா; தவிடிபொடியான அமெரிக்க செல்லும் இந்தியர்களின் கனவு!
அமெரிக்கா செல்லவிரும்பும் இந்தியர்களின் H-1B விசா நேர்காணல்களை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக H-1B விசாவிற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் பெரும் அதிர்ச்சியுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிய சமூக ஊடகச் சோதனை நடைமுறைகளால் தோன்றியுள்ள சிக்கல்கள் அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியர்களின் கனவு கலையுமா?
இந்தியாவில் H-1B விசா நேர்காணல்கள் இந்த மாதம் (டிசம்பர்) நடைபெறவிருந்தன. அவற்றின் ஒத்திவைப்பு ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களைப் பாதித்திருக்கிறது. இதனால் அமெரிக்க செல்லும் இந்தியர்களின் கனவு கலையுமா கேள்வி எழுந்திருக்கிறது.
அதேவேளை H-1B விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகச் கணக்குகளைச் சோதனை செய்யவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.
அதுமட்டுமல்லாது Dependent என்ற சார்ந்திருப்போர் விசாக்களைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளும் சோதனை செய்யப்படும் என்று கூறப்பட்டது.