கனடிய விமான நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை
கனடாவின் ஹாலிபெக்ஸ் விமான நிலையத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக இந்த பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஹாலிபெக்ஸ் ஸ்டண்ட் பீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விமான நிலையப் பணிகள் வழமைக்கு திரும்பியதாக அறிவிக்கப்படுகிறது.
எயார் கனடா விமான சேவை விமானம் ஒன்று தரையிறங்கிய போது சிறு குழப்பு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழப்ப நிலைமையினால் உடனடியாக விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
73 பயணிகளுடன் பயணம் செய்த விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு ஒன்றுக்கு உள்ளானதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.
குறிப்பாக ஓடுபாதையில் தரையிறக்குவதில் சிறு குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் விமானத்தை தரையிறக்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியே தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறு எனினும் விமான நிலைய அதிகாரிகள் எவரும் காயம் அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என்ன காரணத்தினால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.