இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஹமாஸ் படைத்தளபதி
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர், கடந்த மாதம் 07 ஆம் திகதி முதல் இஸ்ரேலுடன் தாக்குதல் நடாத்திவருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் வான் மற்றும் கடல் வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடாத்தி வந்தது.
இதில், கடந்த சில நாட்களாக தரைவழியாக சென்று தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் இடைவிடாத குண்டு மழையால் காசாவில் உள்ள குடியிருப்புகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாகின.
ஹமாஸ் படைத்தளபதி
இந்த நிலையில், ஹமாசின் மத்திய ஜபாலியா படை தளபதி இப்ராஹிம் பியாரி, கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய ஜபாலியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .
இதையடுத்து,கடந்த செவ்வாய்க்கிழமையன்று அங்கு இஸ்ரேல் தீவிர தாக்குதல் தொடுத்தது.
அத்துடன், ஹமாஸின் சுரங்கங்கள், ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. இதின் போது இப்ராஹிம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.