சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரை விடுவிக்க ஹமாஸ் முடிவு!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில் இஸ்ரேலுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், நூற்றுக்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து இஸ்ரேல் காசா மீதான படையெடுப்பை தொடங்கியதுடன் இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க அரசு நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி இரு தரப்பினரிடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
இதன் ஒரு பகுதியாக, இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு படிப்படியாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரும், அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவருமான ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை 580 நாட்களுக்குப் பிறகு விடுவிக்க ஹமாஸ் தீர்மானிக்கப்பட்டுள்ளது.