மூன்று பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்; 369 பலஸ்தீனர்களை விடுவித்தது இஸ்ரேல்
காசாவில் மூன்று இஸ்ரேலிய கைதிகளான அலெக்சாண்டர் ட்ருஃபனோவ் சாகுய் டெக்கல் சென் மற்றும் யைர் ஹார்ன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் 369 பலஸ்தீனர்களை இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து ஹமாஸ் அமைப்பு அடுத்த வாரம் இஸ்ரேலுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 48,239 பேர் இறந்ததாகவும், காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
Freed Hostage Yair Horn reunited with his family after 498 days of Hamas’ captivity.
— Israel War Room (@IsraelWarRoom) February 15, 2025
🇮🇱❤️ pic.twitter.com/h5Lb8Vntfz
111,676 இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் இப்போது இறந்துவிட்டதாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சனிக்கிழமைக்கு முன்பு பயணகைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.