இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ; பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில் முதற்கட்டமாக மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகள் நாளை மாலை விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தப்படி நாளை முதல் இஸ்ரேலைச் சேர்ந்த பிணைக் கைதிகளை விடுவிப்பதும், அதற்கு மாற்றாக சிறைகளில் இருந்து பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பதும் நிகழவிருக்கிறது.
42 நாட்கள் போர் நிறுத்தத்தின் போது முதற்கட்டமாக 33 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க உள்ளனர். இதற்கு பதிலாக 737 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் முதல் நாளில் 3 இஸ்ரேலிய ராணுவ வீராங்கனைகளை ஹமாஸ் இயக்கத்தினர் விடுவிக்க உள்ளனர். பிணைக்கைதிகள் பரிமாற்றத்திற்காக இருநாட்டு எல்லையில் மூன்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.