கனடாவில் 61 வயது முதியவருக்கு கிட்டிய அதிர்ஸ்டம்
கனடாவின் ஹமில்டனில் 61 வயது முதியவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.
தாம் லொத்தர் சீட்டில் பரிசு வென்றதனை ஐந்து தடவைகள் பரீட்சித்து பார்த்துக் கொண்டதாக குறித்த முதியவர் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சம் டொலர்களை குறித்த முதியவர் பரிசாக வென்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மைப் போன்றே தமது பிள்ளைகளும் இந்த லொத்தர் சீட்டு பரிசினால் அதிர்ச்சியடைந்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லொத்தர் சீட்டில் பரிசு வென்றதாக கூறிய போதிலும் பிள்ளைகள் அதனை நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசுத் தொகையை பயன்படுத்தி தனது மகளுக்கு வீடு ஒன்றை கொள்வனவு செய்ய உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹமில்டனைச் சேர்ந்த 61 வயதான William Cripps என்ற நபரே இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.