கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்திய இளைஞர்
கனடாவில் பல பெண்களை துன்புறுத்திய வழக்கில் இளைஞர் ஒருவர் குற்றவாளி என நிரூபணமான நிலையில், அவர் நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியரான 22 வயது சரண்ஜீத் சிங் என்பவரே, தற்போது நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
லண்டனில் அமைந்துள்ள பல்கலைக்கழக மாணவிகளை பின் தொடர்ந்ததாகவும் அவர்களை அச்சுறுத்தியதாகவும் சரண்ஜீத் சிங் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் மீதான வழக்குகளில் 6 பிரிவுகளில் அவர் குற்றவாளி என நிரூபணமானதை அடுத்து, தற்போது நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது டி.என்.ஏ மாதிரிகளும் சேகரிக்கப்படும் எனவும், அவர் இனி பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொள்ளவோ, குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அருகே செல்வதும் ஆயுதங்கள் வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
சரண்ஜீத் சிங் மீதான புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டு, மீண்டும் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். மட்டுமின்றி இவர் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிசாரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
தொழில்முறை விசாவில் கனடாவுக்கு வந்துள்ள சரண்ஜீத் சிங், மிக விரைவில் கனடாவில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவிகள் உட்பட மொத்தம் 13 பெண்கள் இவர் மீது புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.