கனடாவில் பெண் வைத்தியர்களிடம் அத்துமீறல்; வசமாக சிக்கிய இந்தியர் வம்சாவளி இளைஞர்
கனடாவில் பெண் டாக்டர்கள் உள்பட பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக பீல் பிராந்திய பொலிஸார் கூறியதாவது;

அநாகரிக நடத்தை
உடல்நிலை சரியில்லை எனப் பொய்யாக கூறி, வைபவ் என்ற நபர், பெண் டாக்டர்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு சென்று, வைத்தியர்களிடமும், பெண் மருத்துவ ஊழியர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
பல மாதங்களாக இதே வேலையை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்த பெண் மருத்துவ ஊழியர்கள், தங்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், போலியான பெயர் மற்றும் அடையாளத்துடன் தங்களை அணுகியதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்டுள்ள வைபவ் தற்போது விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், லாப நோக்கத்துடன் போலி அடையாளத்தை பயன்படுத்தியது, ஆவண திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.