கனடாவில் இந்திய குடும்பமொன்றின் மரணத்தின் பின்னணியில் இருந்த நபர் கைது
இந்திய குடும்பமொன்று பரிதாபமாக உயிரிழக்க காரணமாகியிருந்த நபர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் து செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் இந்திய குடும்பம் ஒன்று பரிதமாக பலியாகியிருந்தது.
ஹர்ஸ்குமார் ராமன்லால் பாட்டில் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான ஜக்தீஸ் பாட்டில், அவரது மனைவி, மற்றும் இரண்டு பிள்ளைகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
கடும் குளிரில் உறைந்த நிலையில் இவர்களின் சடலங்கள் எல்லைப் பகுதியில் மீட்கப்பட்டது.
ஹர்ஸ்குமார் என்ற நபர், இந்தியாவைச் சேர்ந்த குறித்த தம்பதியினரை அமெரிக்காவில் குடியேற்றுவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்த குடும்பத்தினர் கடும் குளிரினால் உயிரிழந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.