இந்தோனேசியாவில் சூறாவளியின் கோர தாக்கம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 அதிகரிப்பு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோரை காணவில்லையென அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மலாக்கா ஜலசந்தியில் கடந்த வாரம் உருவான சூறாவளியால் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
கட்டுங்கடங்காத இந்த வௌ்ளத்தின் தாக்கத்தால், தென்கிழக்காசிய நாடுகளின் சில பகுதிகளில் பாரிய மழை மற்றும் மண்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.

கடந்த சில தினங்களாக ஆசிய நாடுகளை தாக்கியிருந்த மோசமான காலநிலையின் எதிரொலியே, இந்தோனேசியாவையும் தாக்கியிருந்தது.
இதனால்,இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் கடுமையாக பாதிப்புற்றன.
இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆச்சே தமியாங்கில், வெள்ளத்தால் பல கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி,வாழ்விடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளமையாலும் தொடர்பாடல் செயலிழந்தமையாலும் மீட்பு பணிகளிலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.