நடுவானில் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்... 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
துருக்கியில் நடுவானில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் ஒரு விமானம் தப்பித்த நிலையில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெற்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் வழக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத வகையில் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
இதில் ஒரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஒரு ஹெலிப்படர் விபத்துக்குள்ளானது.
இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் வயல்வெளியில் விழுந்த இரண்டாக உடைந்தது என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.